மாவட்ட செய்திகள்

ஸ்ரீரங்கத்தில் 3 மாத ஆண் குழந்தை கடத்தல் போலீசார் விசாரணை + "||" + 3-month-old girl kidnapping in Srirangam

ஸ்ரீரங்கத்தில் 3 மாத ஆண் குழந்தை கடத்தல் போலீசார் விசாரணை

ஸ்ரீரங்கத்தில் 3 மாத ஆண் குழந்தை கடத்தல் போலீசார் விசாரணை
ஸ்ரீரங்கத்தில் 3 மாத ஆண் குழந்தை கடத்தப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஸ்ரீரங்கம்,

ஸ்ரீரங்கம் மின்வாரிய அலுவலகம் முன்பு மீன்மார்க்கெட் அருகே வசித்து வருபவர் மாணிக்கம்(வயது 22). இவர் கூடை பின்னும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு நிரந்தரமாக வீடு இல்லாததால் அவ்வப்போது பல்வேறு இடங்களில் சாலையோரத்தில் மனைவி மற்றும் குழந்தையுடன் தங்கி கொள்வார்.


நேற்று முன்தினம் மாலை மாணிக்கம் திருவானைக்காவல் பெரியார்நகர் பாலம் அருகே மனைவி மற்றும் தனது 3 மாத ஆண் குழந்தை வேலுவுடன் தூங்கி கொண்டு இருந்தார்.

அப்போது அங்கு வந்த மர்ம நபர் திடீரென குழந்தையை தூக்கி கொண்டு ஓட்டம் பிடித்தார். சிறிதுநேரத்தில் கண்விழித்து பார்த்த மாணிக்கம், குழந்தை கடத்தப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இது குறித்து ஸ்ரீரங்கம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அந்த பகுதியில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு, குழந்தையை கடத்தி சென்ற மர்ம நபர் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

தொடர்புடைய செய்திகள்

1. பறக்கும் படை சோதனையில் ரூ.43½ லட்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் வாலிபரிடம் விசாரணை
கோவையில் பறக்கும் படையினர் நடத்திய சோதனையில் ரூ.43½ லட்சம் வெளிநாட்டு கரன்சி நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டன.
2. காதலி கர்ப்பமான விவகாரம் மனைவிக்கு தெரிந்ததால் புகைப்படக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை போலீஸ் விசாரணை
காதலி கர்ப்பமான விவகாரம் மனைவிக்கு தெரிந்ததால் புகைப்படக்காரர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்
3. எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை போலீசார் விசாரணை
வலங்கைமான் அருகே எலி மருந்தை தின்று கல்லூரி மாணவி தற்கொலை செய்து கொண்டார். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
4. கலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சம் பறிப்பு மர்மநபருக்கு போலீசார் வலைவீச்சு
கலால் அதிகாரிபோல் நடித்து டாஸ்மாக் விற்பனையாளரிடம் ரூ.1 லட்சத்தை பறித்து சென்ற மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
5. ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டு வீச்சு: 3 போலீசார் காயம்
ஜம்மு காஷ்மீரில் போலீசாரை குறிவைத்து கையெறி குண்டுகள் வீசப்பட்டதில் 3 போலீசார் காயம் அடைந்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை