அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி ஆர்ப்பாட்டம்


அயோத்தியில் ராமர் கோவில் கட்டக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 6 Dec 2018 10:30 PM GMT (Updated: 2018-12-07T02:47:09+05:30)

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஜெயங்கொண்டம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தில், அயோத்தியில் ராமர் கோவில் கட்ட வலியுறுத்தி இந்து முன்னணி அமைப்பினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு அரியலூர் கோட்ட செயலாளர் ராஜசேகர் தலைமை தாங்கினார். திருச்சி கோட்ட தலைவர் கனகராஜ் கலந்துகொண்டு பேசினார். மாவட்ட செயலாளர் ராஜா, மாநில செயற்குழு உறுப்பினர் பாலமுருகன், மாவட்ட துணை தலைவர்கள் பழனிசாமி, ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

Next Story