மாவட்ட செய்திகள்

கரூரில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் + "||" + DMK demonstration at Karur

கரூரில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்

கரூரில் த.மு.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கரூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்,

பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி கரூர் மாவட்ட தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் சார்பில் கரூர் ஆர்.எம்.எஸ். அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் உபைதுர் ரகுமான் தலைமை தாங்கி னார். மாநில செயற்குழு உறுப்பினர் கமர்தீன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பாபர் மசூதி இடிப்பு பற்றியும், அந்த வழக்கு கடந்து வந்த பாதை குறித்தும் விளக்கமாக எடுத்து கூறினார். ஆர்ப்பாட்டத்தின்போது, பாபர் மசூதி குறித்து பிரதமர் நாட்டுக்கு அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். மேலும் பாபர் மசூதியை அதே இடத் தில் கட்டிக்கொடுக்க மத்திய அரசு முன்வர வேண்டும். பாபர் மசூதி வழக்கில் சி.பி.ஐ. குற்றம்சாட்டியுள்ள குற்றவாளி களுக்கு உரிய தண்டனை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இதில் முஸ்லிம்கள் பலர் கருப்பு சட்டை அணிந்து கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத் தில் மாவட்ட பொருளாளர் பக்ருதீன், குளித்தலை நகர செயலாளர் லியாகத்அலி, விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் ஜெயராமன் மற்றும் தந்தை பெரியார் திராவிடர் கழகம், ஆதித்தமிழர் பேரவை, நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட அமைப்புகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர். 

தொடர்புடைய செய்திகள்

1. மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
கரூரில், மோட்டார் வாகன சட்ட திருத்தத்தை கைவிடக்கோரி சி.ஐ.டி.யு. போக்குவரத்து தொழிற்சங்க கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
2. ஆட்டோ டிரைவர்கள் ஆர்ப்பாட்டம்
குமரி மாவட்ட ஆட்டோ டிரைவர்கள் சங்கம் (சி.ஐ.டி.யு.) சார்பில் நாகர்கோவில் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
3. கடலூர் முதுநகரில் குடும்பத்துடன், தொழிலாளர்கள் கண்டன ஆர்ப்பாட்டம் - பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
கடலூர் முதுநகரில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிலாளர்கள் தங்களது குடும்பத்துடன் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
4. மத்திய, மாநில அரசுகளை கண்டித்து மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம் திருவாரூரில் நடந்தது
மீனவர்களை பாதுகாக்க தவறிய மத்திய, மாநில அரசுகளை கண்டித்து திருவாரூரில் மீனவ தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
5. குமரியில் 4 இடங்களில் ப.சிதம்பரம் கைதை கண்டித்து காங்கிரசார் ஆர்ப்பாட்டம்
ப.சிதம்பரம் கைதை கண்டித்து குமரி மாவட்டத்தில் 4 இடங்களில் காங்கிரசார் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.