மாவட்ட செய்திகள்

திருப்பூரில் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச சீருடை - குணசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார் + "||" + Free Uniform for Cleaners in Tirupur - Gunasekaran MLA Presented

திருப்பூரில் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச சீருடை - குணசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்

திருப்பூரில் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச சீருடை - குணசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்
திருப்பூரில் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச சீருடைகளை குணசேகரன் எம்.எல்.ஏ. வழங்கினார்.
திருப்பூர்,

திருப்பூர் மாநகராட்சியில் பணியாற்றும் துப்புரவு தொழிலாளர்களுக்கு இலவச சீருடை வழங்கும் நிகழ்ச்சி தாடிக்காரன் முக்கு அலுவலகத்தில் நேற்று நடந்தது.

திருப்பூர் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ. குணசேகரன் கலந்து கொண்டு தொழிலாளர்களுக்கு இலவச சீருடைகளை வழங்கினார். பெண் தொழிலாளர்களுக்கு சேலையும், ஆண் தொழிலாளர்களுக்கு பேண்ட், சட்டையும், துண்டும் வழங்கப்பட்டன. இதில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுமார், மாநகர் நல அதிகாரி பூபதி மற்றும் உதவி ஆணையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் கலந்து கொண்டனர்.


முன்னதாக துப்புரவு தொழிலாளர்கள், திருப்பூர் கலெக்டர் அலுவலகத்தில் கீழ்த்தளத்தில் துப்புரவு பணி நாங்கள் மேற்கொள்ளும்போது மாடியில் இருந்து குப்பையை தங்கள் மீது கொட்டுவதாகவும், மாநகராட்சியில் உள்ள சில அதிகாரிகள் மிகவும் தரக்குறைவான வார்த்தைகளால் திட்டுவதாகவும் புகார் தெரிவித்தார்கள். இதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வதாக கூறி எம்.எல்.ஏ. சமாதானம் செய்தார்.தொடர்புடைய செய்திகள்

1. திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழப்பு
திருப்பூர் அருகே விஷவாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சோக சம்பவம் நடந்துள்ளது.
2. திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு 2 இடங்களில் இன்று முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு
திருப்பூர் நாடாளுமன்ற தொகுதிக்கு திருப்பூரில் 2 இடங்களில் இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
3. திருப்பூரில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது - 35 பவுன் நகைகள் பறிமுதல்
திருப்பூரில் திருட்டில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 35 பவுன் நகைகள் பறிமுதல்செய்யப்பட்டது.
4. திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சி - கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார்
திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் உணவு பாதுகாப்பு விழிப்புணர்வு கண்காட்சியை கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தொடங்கி வைத்தார்.
5. திருப்பூரில் 500 அரங்குகளுடன் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி: 1-ந் தேதி தொடங்குகிறது
திருப்பூரில் 500 அரங்குகளுடன் நிட்டெக் பின்னலாடை எந்திர கண்காட்சி வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது.