மாவட்ட செய்திகள்

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது + "||" + Construction work began to set up a robot car at Thiruvalluvar in Kanyakumari

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது

கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது
கன்னியாகுமரியில் திருவள்ளுவர் சிலைக்கு ரோப் கார் அமைக்க ஆய்வு பணி தொடங்கியது.
கன்னியாகுமரி,

உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கன்னியாகுமரிக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகிறார்கள். பண்டிகை நாட்கள் மற்றும் விடுமுறை தினங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகமாக காணப்படும். தற்போது அய்யப்ப பக்தர்கள் சீசனையொட்டி வெளியூர் மற்றும் வடமாநிலங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர்.


இங்கு கடலின் நடுவே உள்ள பாறைகளில் விவேகானந்தர் மண்டபம், திருவள்ளுவர் சிலை போன்றவை அமைந்துள்ளன. இவற்றுக்கு சுற்றுலா பயணிகள் சென்று வர பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகம் சார்பில் படகுகள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் சுற்றுலா பயணிகள் மூலம் கிடைக்கும் வருமானத்தை பெருக்கவும், சுற்றுலா பயணிகளுக்கு மேலும் பொழுதுபோக்கு வசதி செய்து கொடுக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது.

அதன்படி கன்னியாகுமரியில் ரோப் கார் திட்டத்தை இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் தமிழக அரசுடன் இணைந்து செயல் படுத்த உள்ளது. காமராஜர் மணிமண்டபத்தின் பின் பகுதியில் உள்ள கடற்கரையில் இருந்து திருவள்ளுவர் சிலை வரை 800 மீட்டர் நீளத்திற்கு இந்த ரோப் கார் வசதி செய்யப்படுகி றது. கடல் மட்டத்தில் இருந்து 50 மீட்டர் உயரத்தில் இது அமைகிறது.

இதற்கான சர்வே பணியில் நெல்லையை சேர்ந்த தனியார் நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டு உள்ளனர். இவர்கள் அதிநவீன சாட்டிலைட் கேமரா உதவியுடன் இந்த ஆய்வு பணியை மேற்கொண்டனர்.

நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் கிழக்கு வாசல் கடற்கரை பகுதியில் ஆய்வு நடந்தது. தொடர்ந்து சில நாட்கள் இந்த பணிகள் நடைபெற உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. தேர்தல் விறுவிறுப்பு இல்லாத கன்னியாகுமரி தொகுதி 2-வது நாளிலும் யாரும் மனு தாக்கல் செய்யவில்லை
கன்னியாகுமரி நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் விறுவிறுப்பு இல்லாமல் அமைதியாக உள்ளது. நேற்று 2-வது நாளாகவும் யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
2. கன்னியாகுமரி திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா: 22-ந் தேதி தொடங்குகிறது
கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி வெங்கடாசலபதி கோவில் கும்பாபிஷேக விழா வருகிற 22-ந் தேதி தொடங்குகிறது.
3. கன்னியாகுமரியில் கட்டப்பட்டுள்ள திருப்பதி கோவிலுக்கு தனி அதிகாரி-8 அர்ச்சகர்கள் நியமனம்: கும்பாபிஷேக பணிகள் தீவிரம்
திருப்பதி கோவிலுக்கு தனி அதிகாரி மற்றும் 8 அர்ச்சகர்கள் நியமிக்கப்பட்டு கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
4. கன்னியாகுமரியில் புயல் நிவாரண பொருட்களுடன் ‘திடீர்’ போராட்டம்: இலவசமாக ரெயிலில் கொண்டு செல்ல அனுமதிக்கக்கோரி நடந்தது
கன்னியாகுமரியில் புயல் நிவாரண பொருட்களை இலவசமாக ரெயிலில் கொண்டு செல்ல அனுமதிக்கக்கோரி திடீர் போராட்டம் நடந்தது.
5. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் மீண்டும் தனி ரெயிலாக இயக்கம் பயணிகள் மகிழ்ச்சி
கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் நேற்று முதல் மீண்டும் தனி ரெயிலாக இயக்கப்பட்டது. இதனால் பயணிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.