நீடாமங்கலம் அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி டிரைவர் கைது


நீடாமங்கலம் அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலி டிரைவர் கைது
x
தினத்தந்தி 9 Dec 2018 3:45 AM IST (Updated: 9 Dec 2018 12:30 AM IST)
t-max-icont-min-icon

நீடாமங்கலம் அருகே லாரி மோதி கட்டிட தொழிலாளி பலியானார்.இதுதொடர்பாக டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

நீடாமங்கலம்,

நீடாமங்கலம் அருகே உள்ள ஒரத்தூர் மேலத்தெருவை சேர்ந்தவர் ராஜேஷ்குமார் (வயது 32). கட்டிடத்தொழிலாளி. இவர் மோட்டார் சைக்கிளில் கோவில்வெண்ணி நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது நீடாமங்கலம்-தஞ்சாவூர் சாலையில் சென்ற போது பின்னால் வந்த லாரி, மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே ராஜேஷ்குமார் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த நீடாமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பழனிசாமி, சப்-இன்ஸ்பெக்டர் விஜயராணி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜேஷ்குமார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதுதொடர்பான புகாரின் பேரில் நீடாமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவர் மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றத்தை சேர்ந்த வேலு (55) என்பவரை கைது செய்தனர்.

Next Story