மாவட்ட செய்திகள்

திருவையாறு அருகே தூக்கில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி தற்கொலையா? போலீசார் விசாரணை + "||" + A romantic couple hanging dead at Thiruvaiyar Police investigation

திருவையாறு அருகே தூக்கில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி தற்கொலையா? போலீசார் விசாரணை

திருவையாறு அருகே தூக்கில் பிணமாக தொங்கிய காதல் ஜோடி தற்கொலையா? போலீசார் விசாரணை
திருவையாறு அருகே தூக்கில் காதல் ஜோடி பிணமாக தொங்கினர். அவர்கள் தற்கொலை செய்து கொண்டார்களா? என்பது பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருவையாறு,

தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே உள்ள வைத்தியநாதன்பேட்டை தெற்கு தெருவை சேர்ந்தவர் உதயகுமார். இவருடைய மகள் ஆர்த்தி (வயது19). வைத்தியநாதன்பேட்டை வடக்கு தெருவை சேர்ந்த தண்டபாணி மகன் உத்தமன்(25). இவர்கள் இருவரும் கடந்த சில ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.


இந்த நிலையில் நேற்று வைத்தியநாதன்பேட்டை கொள்ளிடம் ஆற்றங்கரையில் உள்ள தேக்குமர தோப்பில் ஆர்த்தியும், உத்தமனும் மர்மமான முறையில் தூக்கில் பிணமாக தொங்கி கொண்டிருந்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மருவூர் போலீசார் அப்பகுதிக்கு சென்று 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவையாறு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுதொடர்பாக வைத்தியநாதன்பேட்டை கிராம நிர்வாக அதிகாரி விஜயகுமார், போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து காதல் ஜோடியான ஆர்த்தியும், உத்தமனும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது வேறு காரணமா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. ராஜபாளையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளை முயற்சி; 3 பேரை பிடித்து விசாரணை
ராஜபாளையத்தில் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயன்றது தொடர்பாக 3 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
2. கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேர் பலியான விவகாரம்: விசாரணை அறிக்கையை உடனடியாக வழங்க போலீஸ் டி.ஜி.பி.க்கு குமாரசாமி உத்தரவு
கோவிலில் பிரசாதம் சாப்பிட்ட 13 பேர் பலியான விவகாரம் தொடர்பாக விசாரணை அறிக்கையை உடனடியாக வழங்க போலீஸ் டி.ஜி.பி.க்கு, முதல்-மந்திரி குமாரசாமி உத்தரவிட்டுள்ளார்.
3. வங்கி ஊழியர் சாவு குறித்து விசாரணை நடத்தக்கோரி மாவோயிஸ்டுகள் கண்டன ஊர்வலம் நடத்தியதால் பரபரப்பு
வங்கி ஊழியர் சாவு குறித்து விசாரணை நடத்தக்கோரி மாவோயிஸ்டுகள் கண்டன ஊர்வலம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை பிடிக்க போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.
4. இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை
இளம்பெண் கடத்தலா? போலீசார் விசாரணை
5. தனியார் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
நாகர்கோவிலில் தனியார் ஆஸ்பத்திரி 3-வது மாடியில் இருந்து குதித்து நர்சு தற்கொலை செய்து கொண்டார். இதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.