மாவட்ட செய்திகள்

அம்பேத்கர் பதாகை சேதம்: மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் + "||" + Ambedkar Banner Damage: Releasing the Liberation Citizens

அம்பேத்கர் பதாகை சேதம்: மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்

அம்பேத்கர் பதாகை சேதம்: மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல்
அம்பேத்கர் பதா கையை சேதப் படுத்திய மர்ம நபர்களை கைது செய்யக்கோரி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
உடையார்பாளையம்,

அரியலூர் மாவட்டம் உடையார்பாளையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் கடந்த 6-ந் தேதி அம்பேத்கர் நினைவு தினத்தையொட்டி பதாகை வைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் அந்த பதாகையை நேற்று முன்தினம் இரவு மர்ம நபர்கள் கிழித்து சேதப்படுத்தி உள்ளனர். நேற்று காலை இதனை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அவர்கள் ஒன்று திரண்டு அம்பேத்கர் பதாகையை சேதப்படுத்தியவர்களை கண்டித்தும், அவர்களை உடனே கைது செய்யக்கோரியும் உடையார்பாளையம் பஸ் நிறுத்தம் அருகே ஜெயங்கொண்டம்- திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


இதுகுறித்து தகவல் அறிந்த உடையார்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரேமா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் கூறுகையில், அம்பேத்கர் விளம்பர பதாகையை சேதப்படுத்திய மர்ம நபர்களை விரைவில் கைது செய்து விடுவோம் என்று உறுதி அளித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் ஜெயங்கொண்டம்- திருச்சி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.