மாவட்ட செய்திகள்

குடிநீர், மின்சாரம், நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு வாக்குவாதம் + "||" + Public road traffic accelerating quarrels on MLA demanding drinking water, electricity and relief

குடிநீர், மின்சாரம், நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு வாக்குவாதம்

குடிநீர், மின்சாரம், நிவாரணம் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல் எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு வாக்குவாதம்
கறம்பக்குடி அருகே குடிநீர், மின்சாரம், நிவாரணம் கேட்டு 3 இடங்களில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக கந்தர்வகோட்டை எம்.எல்.ஏ.வை முற்றுகையிட்டு வாக்குவாதத்தில் பொதுமக்கள் ஈடுபட்டனர்.
கறம்பக்குடி,

புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே உள்ள ஆத்தங்கரை விடுதி ஊராட்சி பகுதியில் 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர். புயல் தாக்குதலுக்கு பிறகு இந்த பகுதிக்கு இன்னும் மின்சாரம் வழங்கப்பட வில்லை. குடிநீர் வினியோகம் முறையாக செய்யப் படவில்லை. மேலும் நிவாரணம் கணக்கெடுப்பும் முறையாக நடத்தப்படவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பொதுமக்கள் நேற்று காலை குனப்பன்பட்டி சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.


அப்போது அந்த வழியாக வந்த கந்தர்வக்கோட்டை எம்.எல்.ஏ. ஆறுமுகத்தின் காரை முற்றுகையிட்டு அவருடன், கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தங்கள் பகுதியை யாரும் கண்டு கொள்ளவில்லை எனவும், குடிநீர், நிவாரண பொருட்கள் வழங்கப்பட வில்லை எனவும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி தாசில்தார் சக்திவேல் மற்றும் கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல் அம்புக் கோவில் ஊராட்சியில் 24 குடும்பத்தினருக்கு மட்டும் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டதாக கூறி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கறம்பக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

இதேபோல் கடுக்காகாடு கிராமத்தில் மின்சாரம், குடிநீர் மற்றும் நிவாரணம் கேட்டு பொதுமக்கள் வெட்டன்விடுதியில் மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்த தாசில்தார் சக்திவேல், மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தியதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

கறம்பக்குடி ஒன்றிய மார்க்சிஸ்ட் லெனினிஸ்டு கட்சியினர் அனைத்து பகுதி மக்களுக்கும் முழுமையாக நிவாரணம் வழங்க கோரியும், வீடுகளை இழந்தவர்களுக்கு, வீடு கட்டி தர வலியுறுத்தியும் கறம்பக்குடி தாலுகா அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தாசில்தார் சக்திவேலிடம் நிவாரணம் வழங்க வேண்டும் என்று மனு கொடுத்து விட்டு அனைவரும் கலைந்து சென்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. காதலியை ஏமாற்றிய வாலிபரை கைது செய்ய கோரி உறவினர்கள் சாலை மறியல்
காதலியை ஏமாற்றிய வாலிபரை கைது செய்யக்கோரி காதலியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். திருமணத்திற்கு வலியுறுத்தினால் தனிமையில் இருந்த வீடியோக்களை வெளியிடுவேன் என்றும் மிரட்டுவதாக புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
2. குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்
குடிநீர் கேட்டு காலிக்குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
3. பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட 17 பேர் கைது
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் நேற்று மதியம் பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.
4. பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல்
பல்வேறு கோரிக் கைகளை வலியுறுத்தி கிராமமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
5. பாலியல் கும்பல் மீது நடவடிக்கை கோரி கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்
பொள்ளாச்சியில், பெண்களுக்கு எதிராக நடந்த பாலியல் சம்பவத்தை கண்டித்தும், அதில் சம்பந்தப்பட்ட கும்பல் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கல்லூரி மாணவர்கள் வகுப்புகளை புறக்கணித்து வெளியே வந்தனர்.

அதிகம் வாசிக்கப்பட்டவை