கத்தியை காட்டி மிரட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிக்க முயற்சி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது


கத்தியை காட்டி மிரட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிக்க முயற்சி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 Dec 2018 3:30 AM IST (Updated: 10 Dec 2018 12:32 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தரமணி பகுதியில் கத்தியை காட்டி மிரட்டி தனியார் நிறுவன ஊழியரிடம் பணம் பறிக்க முயற்சி செய்த 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

ஆலந்தூர்,

சென்னை தரமணி பகுதியில் அப்பகுதி போலீசார் ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். அப்போது வாலிபர்கள் 2 பேர் உணவுகளை டெலிவரி செய்யும் தனியார் உணவக நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியரிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறிக்க முயன்றதை போலீசார் பார்த்தனர். உடனடியாக போலீசார் அந்த வாலிபர்களை பிடிக்க முயன்றபோது, ‘‘எங்களை பிடிக்க வந்தால் கத்தியால் குத்திவிடுவோம்’’ என்று அவர்கள் போலீசாரிடமும் மிரட்டினார்கள்.

ஆனால் போலீசார் அவர்கள் 2 பேரையும் மடக்கிப்பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள் தரமணி எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த அஜித் (வயது 20) என்பதும், நந்தனத்தில் உள்ள கல்லூரியில் 3–ம் ஆண்டு படித்து வருவதும் தெரியவந்தது. மற்றொருவர் அவரது நண்பர் விக்னேஷ்(20) என்பது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர்.


Next Story