அரசு கல்லூரியில் மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்


அரசு கல்லூரியில் மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம்
x
தினத்தந்தி 11 Dec 2018 3:30 AM IST (Updated: 11 Dec 2018 3:30 AM IST)
t-max-icont-min-icon

பொன்னேரியில் மாணவ– மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

பொன்னேரி,

பொன்னேரியில் உலகநாதன் நாராயண சாமி அரசினர் தன்னாட்சி கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், குடிநீர் வசதி, கழிவறை வசதி போன்றவற்றை ஏற்படுத்தி தரவேண்டும். இலவச பஸ் பாஸ் வழங்க வேண்டும் என்று கூறி மாணவ–மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர்.

பின்னர் இதுகுறித்து கல்லூரி முதல்வர் சீனிவாசனிடம் மாணவ–மாணவிகள் மனு அளித்தனர். அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.


Next Story