தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்


தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
x
தினத்தந்தி 12 Dec 2018 4:45 AM IST (Updated: 12 Dec 2018 2:39 AM IST)
t-max-icont-min-icon

சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்றதையடுத்து காங்கிரஸ் கட்சியினர் தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

கிருஷ்ணகிரி,

மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா மற்றும் மிசோரம் ஆகிய 5 மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் நேற்று வெளியானது. இதில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதை கிருஷ்ணகிரியில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடினார்கள். கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் நடந்த நிகழ்ச்சிக்கு முன்னாள் காங்கிரஸ் தலைவர்கள் ஜேசு துரைராஜ், நாராயணமூர்த்தி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.

இதில் மாநில செயற்குழு உறுப்பினர் ஏகம்பவாணன், முன்னாள் நகர தலைவர் ரகமத்துல்லா, மாவட்ட சிறுபான்மை தலைவர் வக்கீல் சபீர் அகமத், சிறுபான்மை நகர தலைவர் ஆஜித், மாவட்ட துணை தலைவர் டாக்டர் தகி மற்றும் நிர்வாகிகள் கோவிந்தசாமி, ஆறுமுகம் சுப்பிரமணி உள்பட பலர் கலந்து கொண்டு பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

இதேபோல் கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் ஓசூரில் நேற்று பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஓசூர் எம்.ஜி.ரோட்டில் உள்ள காந்தி சிலை அருகே நடந்த இந்த நிகழ்ச்சிக்கு மேற்கு மாவட்ட தலைவர் முரளி தரன் தலைமை தாங்கினார். முன்னதாக அவர் கட்சி நிர்வாகிகளுடன் காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இந்த நிகழ்ச்சியில் ஓசூர் நகர தலைவர் நீலகண்டன், மாநில பொதுக்குழு உறுப்பினர் சூர்ய கணேஷ், நகர துணைத்தலைவர் சந்துரு, முருகன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசரெட்டி உள்பட பலர் கலந்து கொண்டனர். இதையொட்டி கட்சி நிர்வாகிகள் பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

ஊத்தங்கரை வட்டார, நகர காங்கிரஸ் சார்பில் சட்டசபை தேர்தல்களில் வெற்றி பெற்றதை வரவேற்று ஊத்தங்கரையில் கட்சி நிர்வாகிகள் ராஜீவ் காந்தி சிலைக்கு மாலை அணிவித்தும், பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர். இந்த நிகழ்ச்சிக்கு தெற்கு வட்டார தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நகர தலைவர் விஜயகுமார், மாவட்ட துணை தலைவர் ஆசிரியர் ராமச்சந்திரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் நிர்வாகிகள் குப்புசாமி, முத்து, அப்துல் கனி, கோவிந்தசாமி, நாகராஜ், இளையராஜா மற்றும் சார்பு அணி தலைவர்கள் மாவட்ட பிரதிநிதிகள், தொண்டர்கள் கலந்து கொண்டு பட்டாசு வெடித்து, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கினர்.

இதேபோல் சட்டசபை தேர்தல்களில் காங்கிரஸ் வெற்றி பெற்றதை வரவேற்று மத்தூர் பஸ் நிலையத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடப்பட்டது. முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாது, மாவட்ட துணை தலைவர் மிண்டிகிரி ரவி ஆகியோர் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் துணை தலைவர் அஸ்முதீன், வட்டார செயலாளர் சாகுல் அமீது, சிறுபான்மை பிரிவு நிர்வாகி ஜமால், நகர தலைவர் அக்பர் அலி, நகர செயலாளர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக கட்சி நிர்வாகிகள் ராஜீவ்காந்தி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். இதையடுத்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.

தர்மபுரி மாவட்டத்திலும் காங்கிரசார் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி கொண்டாடினர். அரூரில் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கினர். இதில் வட்டார தலைவர் சுபாஷ், முன்னாள் எம்.எல்.ஏ. அபரஞ்சி, நகர தலைவர் கணேசன், மாவட்ட துணை செயலாளர் வேடியப்பன், பட்டதாரி பிரிவு செயலாளர் அருட்ஜோதிமுருகன் மற்றும் வைரவன், மோகன், ஆறுமுகம், மார்கீஸ், பச்சை முனுசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.




Next Story