தடை செய்யப்பட்ட பொருட்கள் பறிமுதல் நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை
ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர்.
தாமரைக்குளம்,
அரியலூர் நகராட்சி ஆணையர் திருநாவுக்கரசு தலைமையில், சுகாதார ஆய்வாளர் முத்துமுகமது முன்னிலையில், துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் அரியலூர் நகராட்சிக்கு உட்பட்ட சின்னக்கடைத்தெரு, பெரியகடைத்தெரு, மார்க்கெட் தெரு மற்றும் பள்ளிகளுக்கு அருகாமையில் உள்ள கடைகளில் ஆய்வுமேற்கொண்டனர். ஆய்வில் ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்பிலான குடிநீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் கப், பிளாஸ்டிக் பொருட்கள், காலாவதியான பொருட்கள் மற்றும் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து அழித்தனர். நகராட்சிக்கு உட்பட்ட பகுதி முழுவதும் தொடர்ந்து இந்த ஆய்வு நடைபெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும் பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யக் கூடாது என வணிகர்களிடம் தெரிவித்தனர்.

Related Tags :
Next Story