வெள்ளாற்றில் மணல் அள்ள கடலூர் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு


வெள்ளாற்றில் மணல் அள்ள கடலூர் மாட்டு வண்டி தொழிலாளர்களுக்கு எதிர்ப்பு
x
தினத்தந்தி 16 Dec 2018 4:15 AM IST (Updated: 16 Dec 2018 2:11 AM IST)
t-max-icont-min-icon

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள கடந்த மாதம் தமிழக அரசு அனுமதி அளித்தது.

செந்துறை,

அரியலூர் மாவட்டம், செந்துறை அருகே உள்ள ஆலத்தியூர் வெள்ளாற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள கடந்த மாதம் தமிழக அரசு அனுமதி அளித்தது. ஆலத்தியூர் பகுதியில் மணல் எடுத்துக்கொண்டு தளவாய் அருகே உள்ள சேந்தமங்கலம் வழியாக ஆற்றை விட்டு வெளியே வரவேண்டும் என வழி ஏற்படுத்தி தரப்பட்டது. இந்நிலையில் நேற்று காலை கடலூர் மாவட்ட மாட்டு வண்டிதொழி லாளர்கள்எங்களுக்கும் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி சீட்டு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். ஆனால் அரியலூர் மாவட்ட மாட்டு வண்டி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த அரியலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர், தளவாய் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் கடலூர் மாவட்ட மாட்டு வண்டி தொழிலாளர்கள் இங்கே வந்து மணல் அள்ளக்கூடாது என்று முடிவு எடுக்கப்பட்டது. 

Next Story