தண்டவாள பராமரிப்பு பணி: அம்ரிதா, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தில் மாற்றம்


தண்டவாள பராமரிப்பு பணி: அம்ரிதா, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்கத்தில் மாற்றம்
x
தினத்தந்தி 16 Dec 2018 6:37 AM IST (Updated: 16 Dec 2018 6:37 AM IST)
t-max-icont-min-icon

தண்டவாள பராமரிப்பு பணிக்காக அம்ரிதா, குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மதுரை,

தென்னக ரெயில்வேக்கு உட்பட்ட திருவனந்தபுரம் ரெயில்வே கோட்டத்தில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடந்து வருகின்றன. இதனால் மதுரை வழியாக இயக்கப்படும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி பாலக்காடு–நெல்லை பாலருவி எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16792) இன்று(ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 18–ந் தேதி வரை காயங்குளம் ரெயில்நிலையத்தில் இருந்து சுமார் 3 மணி நேரம் தாமதமாக புறப்படும்.

திருவனந்தபுரம்–மதுரை அம்ரிதா எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16343) நாளை(திங்கட்கிழமை) மற்றும் 18–ந் தேதி ஆகிய 2 நாட்களும் திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து இரவு 10 மணிக்கு பதிலாக ஒரு மணி நேரம் தாமதமாக இரவு 11 மணிக்கு மதுரை புறப்படும். இந்த ரெயில் வருகிற 20–ந் தேதி முதல் 23–ந் தேதி வரையிலும் மற்றும் 26–ந் தேதி, 28–ந் தேதி, 29–ந் தேதிகளில் திருவனந்தபுரம் ரெயில்நிலையத்தில் இருந்து நள்ளிரவு 12 மணிக்கு மதுரை புறப்படும். அத்துடன் கொல்லம்–சஸ்தம்கோட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 2 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.

சென்னை–குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16127) இன்று(ஞாயிற்றுக்கிழமை) திருவனந்தபுரம்–கொல்லம் ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 2½ மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். இந்த ரெயில் வருகிற 19–ந் தேதி கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் ¾ மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். வருகிற 21–ந் தேதி திருவனந்தபுரம் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் ஒரு மணி நேரம் தாமதமாக புறப்படும். அத்துடன், கொல்லம்–சஸ்தம்கோட்டை ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 1½ மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.

இந்த ரெயில் வருகிற 22–ந் தேதி முதல் 24–ந் தேதி வரையிலும், 27–ந் தேதி, 29–ந் தேதி மற்றும் 30–ந் தேதிகளில் திருவனந்தபுரம் ரெயில்நிலையத்தில் இருந்து 1 மணி நேரம் தாமதமாக இயக்கப்படும். அத்துடன் கொல்லம்–பெரிநாடு ரெயில் நிலையங்களுக்கு இடையே சுமார் 1½ மணி நேரம் தாமதமாக இயக்கப்படும்.

மறுமார்க்கத்தில் குருவாயூர்–சென்னை எக்ஸ்பிரஸ் ரெயில்(வ.எண்.16128) வருகிற 20–ந் தேதி, 28–ந் தேதி, 29–ந் தேதிகளில் குருவாயூர் ரெயில்நிலையத்தில் இருந்து இரவு 9.35 மணிக்கு பதிலாக இரவு 11.05 மணிக்கு புறப்படும். இந்த ரெயில் வருகிற 18–ந் தேதி கொல்லம் ரெயில் நிலையத்தில் இருந்து சுமார் 35 நிமிடம் தாமதமாக இயக்கப்படும்.


Next Story