திருமண ஆசைவார்த்தை கூறி, கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைது


திருமண ஆசைவார்த்தை கூறி, கல்லூரி மாணவியை ஏமாற்றிய வாலிபர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2018 10:00 PM GMT (Updated: 16 Dec 2018 8:03 PM GMT)

தேனியில் கல்லூரி மாணவியிடம் திருமண ஆசைவார்த்தை கூறி ஏமாற்றிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஆண்டிப்பட்டி,

தேனி பகுதியை சேர்ந்த 22 வயது மாணவி ஆண்டிப்பட்டியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வந்தார். இவர் தினமும் கல்லூரிக்கு பஸ்சில் சென்று வந்தார். அப்போது சின்னமனூரை சேர்ந்த கிருஷ்ணவேல்(வயது 21) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது. அவர் மாணவியை காதலிப்பதாகவும், திருமணம் செய்து கொள்வதாகவும் ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது.

இந்தநிலையில் மாணவி வேறு பிரிவை சேர்ந்தவர் என்பதால் அவருடன் பேசுவதை கிருஷ்ணவேல் தவிர்த்து வந்தார். இதையடுத்து மாணவி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கிருஷ்ணவேலிடம் கேட்ட போது அவர் மறுத்துவிட்டார். எனவே தான் ஏமாற்றப்பட்டதை தெரிந்து கொண்ட அவர், அதுகுறித்து ஆண்டிப்பட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் உஷா வழக்குப்பதிவு செய்து கிருஷ்ணவேலை கைது செய்தார்.

Next Story