மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி: பெண்கள் பிரிவில் கரூர் அணி சாம்பியன்
கரூரில் நடந்த மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டியில் பெண்கள் பிரிவில் கரூர் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. அந்த அணிக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுத்தொகையை போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் வழங்கினார்.
கரூர்,
தமிழகம் மற்றும் கரூர் மாவட்ட கூடைப்பந்து கழகம் சார்பில் கரூர் திருவள்ளுவர் மைதானத்தில் கடந்த 12-ந்தேதி மண்டல அளவிலான ஆண்களுக்கான கூடைப்பந்து போட்டிகள் தொடங்கியது. இதில் கரூர், திருச்சி, திண்டுக்கல், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர் உள்ளிட்ட 9 மாவட்டங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்றன. ஆண்கள் பிரிவில் 64 அணிகள் பங்கேற்றதில், நாக் அவுட் முறையில் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு அணிகள் மோதின. பெண்கள் பிரிவில் 15 அணிகள் பங்கேற்று நாக் அவுட் முறையில் போட்டிகள் நடந்தன. அந்த வகையில் நேற்று இறுதி போட்டி நடந்தது. இதில் ஆண்கள் பிரிவில் திண்டுக்கல் பி.பி.சி. அணியானது 62-59 என்கிற புள்ளிகள் கணக்கில் கரூர் கோல்டன் பி.பி.சி. அணியை வென்றது.
பரிசளிப்பு விழா
அதனை தொடர்ந்து நடந்த பெண்களுக்கான இறுதி போட்டி, கரூர் ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் விதமாக இருந்தது. ஆட்டத்தின் தொடக்கத்தில் இருந்தே கரூர் பி.பி.சி. அணி புள்ளி பட்டியலில் முன்னிலை வகித்தது. பின்னர் முடிவில் 61-50 என்கிற புள்ளிகள் கணக்கில் கரூர் பி.பி.சி அணி மயிலாடுதுறை சாய் விடுதி அணியை வென்றது. பின்னர் நடந்த பரிசளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜய பாஸ்கர் கலந்து கொண்டு, ஆண்கள்-பெண்களுக்கான மண்டல அளவிலான நடந்த கூடைப்பந்தாட்ட போட்டி களில் சாம்பியன் பட்டம் வென்ற திண்டுக்கல், கரூர் அணிகளுக்கு சுழற்கோப்பை மற்றும் பரிசுத்தொகையை வழங்கி வாழ்த்து கூறி பாராட் டினார். இந்த நிகழ்ச்சியில், கரூர் கூடைப்பந்தாட்ட கழக செயலாளர் செந்தில்குமார், தலைவர் கார்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story