இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 17 Dec 2018 3:45 AM IST (Updated: 17 Dec 2018 2:33 AM IST)
t-max-icont-min-icon

இந்து மக்கள் கட்சி சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

கரூர்,

இந்து மக்கள் கட்சி சார்பில் கரூர் தாலுகா அலுவலகம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட தலைவர் மணி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில், சபரிமலை வழக்கில் போராட்டம் நடத்திய அய்யப்ப பக்தர்களை தாக்கியும், பொய் வழக்குகளை பதிவு செய்யும் கேரள அரசை கண்டித்து மாநில செயலாளர் மணிகண்டன் பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தில், சபரிமலையின் புனிதத்தை காக்கும் வகையில் பழைய முறைப்படியே ஆகமவிதிகளை கடைபிடிக்க வேண்டும். சபரிமலை தொடர்பான கோர்ட்டு தீர்ப்பினை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். இந்த ஆர்ப்பாட்டத்தில் கருப்பு கொடியை கையில் பிடித்தபடியே இந்து மக்கள் கட்சியினர் பங்கேற்றனர். இதில் கரூர் நகர தலைவர் ஈஸ்வரன், மாவட்ட துணை செயலாளர் மூர்த்தி உள்பட நிர்வாகிகள், உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். 

Next Story