ஒலிபரப்பு நிறுவனத்தில் அதிகாரி பணி


ஒலிபரப்பு நிறுவனத்தில் அதிகாரி பணி
x
தினத்தந்தி 17 Dec 2018 8:08 AM GMT (Updated: 17 Dec 2018 8:08 AM GMT)

பிராட்காஸ்ட் என்ஜினீயரிங் கன்சல்டன்ட் இந்தியா லிமிடெட் (BECIL) எனப்படும் ஒலிபரப்பு பொறியியல் நிறுவனத்தில் மேலாளர் (பேஷன்ட் கேர்), கோஆர்டினேட்டர் (பேஷன்ட் கேர்) போன்ற பணிகளுக்கு விண்ணப்பம் கோரப்பட்டு உள்ளது.

மொத்தம் 50 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். மேலாளர் பணிக்கு 40 வயதுக்கு உட்பட்டவர்களும், கோஆர்டினேட்டர் பணிக்கு 35 வயதுக்கு உட்பட்டவர்களாகவும் இருக்க வேண்டும். லைப் சயின்ஸ் பட்டப்படிப்புடன், ஹாஸ்பிட்டல்/ஹெல்த்கேர் மேனேஜ்மென்ட் போன்ற முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்கலாம். லைப்சயின்ஸ் பட்டப்படிப்பு படித்தவர்கள் கோஆர்டினேட்டர் பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

விருப்பமுள்ளவர்கள் குறிப்பிட்ட கட்டணம் செலுத்தி, விண்ணப்பத்தை நிரப்பி அனுப்ப வேண்டும். விண்ணப்பம் 31-12-2018-ந் தேதிக்குள் சென்றடைய வேண்டும். இது பற்றிய விரிவான விவரங்களை http://www.becil.com/ என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

Next Story