கலெக்டர் அலுவலகம் முன்பு சங்கு ஊதும் போராட்டம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 25 பேர் கைது


கலெக்டர் அலுவலகம் முன்பு சங்கு ஊதும் போராட்டம் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 25 பேர் கைது
x
தினத்தந்தி 18 Dec 2018 4:30 AM IST (Updated: 18 Dec 2018 12:38 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் கலெக்டர் அலுவலகம் முன்பு சங்கு ஊதும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தினர் 25 பேரை போலீசார் கைது செய்தனர்.

திருவாரூர்,

குடும்பர், பண்ணாடி, காலாடி, கடையர், தேவேந்திரகுலத்தார், பள்ளர், வாதிரியார் ஆகிய 7 பிரிவுகளையும் இணைத்து தேவேந்திர குல வேளாளர் என பெயர் மாற்றம் செய்து அரசாணை வெளியிட வேண்டும் என்பதை வலியுறுத்தி திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் சங்கு ஊதும் போராட்டம் நடந்தது.

போராட்டத்துக்கு கட்சியின் மாவட்ட தலைவர் ஆரோக்்கிய செல்வம் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் ரஜினிபாண்டியன் முன்னிலை வகித்தார்.

இதில் கலந்து கொண்ட நகர செயலாளர் பாவா, ஒன்றிய செயலாளர்கள் ஆர்.முருகானந்தம், முருகானந்தம் உள்பட 25 பேரை போலீசார் கைது செய்தனர்.
1 More update

Next Story