இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் குவைத், யூரோ கரன்சிகள் பறிமுதல்


இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் குவைத், யூரோ கரன்சிகள் பறிமுதல்
x
தினத்தந்தி 18 Dec 2018 4:00 AM IST (Updated: 18 Dec 2018 1:25 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இலங்கைக்கு கடத்த முயன்ற ரூ.5 லட்சம் குவைத், யூரோ கரன்சிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஆலந்தூர்,

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து இலங்கை தலைநகர் கொழும்பிற்கு விமானம் செல்ல இருந்தது. இதில் பயணம் செய்ய இருந்தவர்களை விமான நிலைய சுங்க இலாகா அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அப்போது சென்னையை சேர்ந்த முகமது ஆரிப் (வயது 35) என்பவர் கொழும்பிற்கு செல்ல வந்தார். இவரது உடமைகளை சோதித்தனர். அப்போது ஒரு சூட்கேசில் குவைத் தினார் மற்றும் யூரோ கரன்சிகள் மறைத்து வைக்கப்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர்.

ரூ.5 லட்சம் மதிப்புள்ள 1155 குவைத் தினார், 2800 யூரோ கரன்சியை பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக முகமது ஆரிப் விமான பயணத்தை ரத்து செய்துவிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story