கோவில் பிரசாதம் சாப்பிட்டவர்களில் மேலும் ஒரு பெண் சாவு


கோவில் பிரசாதம் சாப்பிட்டவர்களில் மேலும் ஒரு பெண் சாவு
x
தினத்தந்தி 17 Dec 2018 10:00 PM GMT (Updated: 17 Dec 2018 8:36 PM GMT)

சாம்ராஜ்நகர் மாவட்டம் ஹனூர் தாலுகா சுலவாடி கிராமத்தில் அமைந்துள்ள கிச்சுகுத்தி மாரம்மா கோவிலில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு பிரசாதம் சாப்பிட்ட 12 பக்தர்கள் இறந்தனர்.

பெங்களூரு,

மேலும் ஏராளமானோர் உடல்நிலை பாதிக்கப்பட்டு மைசூருவில் உள்ள கே.ஆர். அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். நேற்று காலையில் அரசு, இச்சம்பவத்தில் இதுவரை 13 பேர் இறந்துள்ளதாக அறிக்கை ஒன்றை வெளியிட்டது.

இந்த நிலையில் மைசூரு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த மைலி பாய்(வயது 37) என்ற பெண் நேற்று மரணம் அடைந்தார். இதனால் இந்த சம்பவத்தில் பலி எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. பலியான மைலி பாயின் கணவரும் பிரசாதம் சாப்பிட்டு சிகிச்சை பலனின்றி ஏற்கனவே இறந்துவிட்டது குறிப்பிடத்தக்கது.

இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் தற்போது அனாதைகளாகி விட்டனர். அவர்களை ஊர்மக்கள் கவனித்து வருகிறார்கள்.

Next Story