மெழுகுவர்த்தி ஏந்தி கிராமிய அஞ்சல் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
கரூர் கோட்ட அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
கரூர்,
கரூர் கோட்ட அகில இந்திய கிராமிய அஞ்சல் ஊழியர் சங்கம் சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் கருணாநிதி தலைமை தாங்கினார். மாவட்ட பொருளாளர் பழனிசாமி முன்னிலை வகித்தார். இதில் துணை தலைவர் முருகேசன், துணை செயலாளர் சாமுவேல், செயற்குழு உறுப்பினர் லோகநாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 7-வது ஊதியக்குழுவில் முரண்பாடுகளை களைய வேண்டும், சம்பளத்துடன் கூடிய விடுப்பினை 20-லிருந்து 30-ஆக உயர்த்த வேண்டும். இன்சூரன்ஸ் தொகை மாதாந்திர பிடித்தத்தை உயர்த்தி ரூ.5 லட்சம் வழங்கிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. தொடர்ந்து மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று (செவ்வாய்க்கிழமை) முதல் கிராமிய அஞ்சல் ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். இதனால் தபால்களை பிரித்து சம்பந்தப்பட்ட முகவரிக்கு கொண்டு செல்வது உள்ளிட்ட பணிகளுக்காக மாற்று ஏற்பாடுகளை கரூர் தபால் துறையில் மேற்கொண்டு வருகின்றனர்.

Related Tags :
Next Story