எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தேர்தலுக்கு பிறகு முடிவு செய்ய வேண்டும் தேசியவாத காங்கிரஸ் கருத்து
எதிர்க்கட்சிகளின் பிரதமர் வேட்பாளர் யார்? என்பதை தேர்தலுக்கு பிறகு முடிவு செய்ய வேண்டும் என்று தேசியவாத காங்கிரஸ் கருத்து தெரிவித்து உள்ளது.
மும்பை,
தமிழக முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதியின் சிலை திறப்பு விழா சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவர் ராகுல் காந்தி, சோனியா காந்தி, ஆந்திர முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், புதுவை முதல்-அமைச்சர் நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
அவர்கள் மத்தியில் பேசிய தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என சூளுரைத்தார். ராகுல் காந்தியே வருக... நாட்டிற்கு நல்லாட்சி தருக... என்றும் கூறினார்.
எதிர்க்கட்சிகளின் சார்பில் பிரதமர் வேட்பாளர் இன்னும் அறிவிக்கப்படாத நிலையில், ராகுல் காந்தியை தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் முன்மொழிந்து இருப்பது தேசிய அரசியலில் விறுவிறுப்பை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து சரத்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சியின் செய்தி தொடர்பாளர் நவாப் மாலிக்கிடம் நேற்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது:-
பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்து நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளியான பின்பு முடிவு செய்வது என்ற நிலைப்பாட்டை காங்கிரஸ் ஏற்கனவே எடுத்துள்ளது.
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி பிரதமராக ஆதரவு அளிப்பது பாராட்டிற்குரியதாகும்.
ஆனால் காங்கிரஸ் மற்றும் ஒத்த கருத்துடைய கட்சிகள் தங்களுக்குள் இதுகுறித்து பேசி வருகின்றனர். இதை தற்போது விவாதிக்கவேண்டிய விஷயம் இல்லை. அனைத்து கட்சிகளும் தேர்தல் முடிவுக்கு பின் பிரதமர் வேட்பாளர் யார் என்பதை முடிவு செய்யவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story