சேலத்தில் வெவ்வேறு இடங்களில் டிரைவர், கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை


சேலத்தில் வெவ்வேறு இடங்களில் டிரைவர், கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 17 Dec 2018 10:15 PM GMT (Updated: 17 Dec 2018 10:59 PM GMT)

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் டிரைவர், கட்டிட தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

சேலம், 

சேலம் நெத்திமேடு பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 38). இவர் சிவதாபுரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் டிரைவராக வேலை செய்து வந்தார். இவருக்கு 2 மனைவிகள் இருந்தனர். மூர்த்தியிடம் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக அவருடைய மனைவிகள் பிரிந்து சென்று விட்டனர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு மூர்த்தி அந்த பகுதியை சேர்ந்த ஒரு மாணவியை கேலி, கிண்டல் செய்ததாக கூறப்படுகிறது. இதை அவருடைய உறவினர்கள் தட்டிக்கேட்டனர். இதனால் மூர்த்தி வாழ்க்கையில் விரக்தி அடைந்த நிலையில் காணப்பட்டார். நேற்று முன்தினம் வீட்டில் மூர்த்தி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவலறிந்த அன்னதானப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். இதுதொடர்பான புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலம் நரசோதிப்பட்டி பனங்காடு வளவு பகுதியை சேர்ந்தவர் அபிமன்யு (46). கட்டிட தொழிலாளி. இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்ததாகவும், சரியாக வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகவும் கூறப்படுகிறது. அபிமன்யு மது குடிப்பதற்காக மனைவியிடம் பணம் கேட்டு அடிக்கடி தகராறு செய்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு அபிமன்யு வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் கிடந்தார். இதைப்பார்த்த அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்தநிலையில் நேற்று சிகிச்சை பலனின்றி அபிமன்யு இறந்தார். இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

சேலத்தில் வெவ்வேறு இடங்களில் டிரைவர், கட்டிட தொழிலாளி ஆகிய 2 பேர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதிகளில் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story