மாவட்டத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இல்லை - ஆராய்ச்சி நிலையம் தகவல்


மாவட்டத்தில் 3 நாட்கள் மழைக்கு வாய்ப்பு இல்லை - ஆராய்ச்சி நிலையம் தகவல்
x
தினத்தந்தி 19 Dec 2018 4:47 AM IST (Updated: 19 Dec 2018 4:47 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் அடுத்த 3 நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்பு இல்லை என வானிலை ஆராய்ச்சி நிலையம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) முதல் 3 நாட்களுக்கு நிலவும் வானிலை குறித்து கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் வெளியிடப்பட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

அடுத்த 3 நாட்கள் வானம் லேசான மேகமூட்டத்துடன் காணப்படும். மழை பெய்ய வாய்ப்பு இல்லை. காற்று மணிக்கு 6 கி.மீ. வேகத்தில் தென்கிழக்கு திசையில் இருந்து வீசும். வெப்பநிலையை பொறுத்தவரையில் அதிகபட்சமாக 89.6 டிகிரியாகவும், குறைந்தபட்சமாக 69.8 டிகிரியாகவும் இருக்கும். காற்றின் ஈரப்பதம் அதிகபட்சமாக முறையே 80, 80, 85 சதவீதமாகவும், குறைந்தபட்சமாக 40, 45, 45 சதவீதமாகவும் இருக்கும்.

சிறப்பு வானிலையை பொறுத்த வரையில் அடுத்த 3 நாட்களுக்கு வானம் தெளிவாகவும், மழை அற்றும் காணப்படும். காற்றின் வேகம் குறைவாகவும், அதன் திசை பெரும்பாலும் தென் கிழக்கில் இருந்தும் வீசும்.

பகல் வெளிச்சத்தின் கால அளவு குறைந்து வருவதால், வைட்டமின் ‘டி’ குறைபாடு வராமல் தடுக்க சற்றே அதிக அளவில் வைட்டமின் டி-3 என்ற வைட்டமின் மருந்தினை தீவனத்தில் சேர்த்து வர வேண்டும். இது கோழிகளுக்கு கால்பிடிப்பு மற்றும் முட்டை ஓடு சம்பந்தமான குறைபாடுகள் குறைய உதவும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.


Next Story