மேகதாது அணை விவகாரம்: அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும் தொல்.திருமாவளவன் வலியுறுத்தல்
மேகதாது அணை மற்றும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டி விவாதித்து முடிவு எடுக்க வேண்டும் என்று தொல்.திருமாவளவன் கூறினார்.
களியக்காவிளை,
தமிழகத்தில் சாதி-மத பேதமற்ற சமூக நல்லிணக்கத்திற்காக போராடுகின்றது, விடுதலை சிறுத்தைகள் கட்சி. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் ராகுல் காந்தியை பிரதமர் ஆக்குவதென தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதற்கு வலு சேர்க்கும் விதத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் தேசம் காப்போம் என்கிற மாநாட்டை பொங்கலுக்கு பிறகு திருச்சியில் நடத்த உள்ளோம். அந்த மாநாட்டில் ராகுல் காந்தியை பிரதமராக்குவோம் என உறுதி ஏற்போம்.
தற்போது கஜா புயலால் டெல்டா மாவட்டங்கள் பாதிக்கப்பட்டதற்கு தமிழக அரசு ரூ.15 ஆயிரம் கோடியை மத்திய அரசிடம் கேட்டது. ஆனால் மத்திய அரசு 10 சதவிகிதம் பணம் கூட வழங்கவில்லை.
மேகதாது அணை மற்றும் ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் குறித்து விவாதிக்க அனைத்துக்கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்டி முடிவு எடுக்க வேண்டும்.
இவ்வாறு தொல்.திருமாவளவன் கூறினார். அப்போது குமரி மேற்கு மாவட்ட செயலாளர் மாத்தூர் ஜெயன் உள்பட கட்சி நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

Related Tags :
Next Story