தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து செந்தில்பாலாஜி ஆலோசனை


தி.மு.க. நிர்வாகிகளை சந்தித்து செந்தில்பாலாஜி ஆலோசனை
x
தினத்தந்தி 20 Dec 2018 4:00 AM IST (Updated: 20 Dec 2018 2:56 AM IST)
t-max-icont-min-icon

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அ.ம.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார். இதையடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. கட்சி நிர்வாகிகளை சந்தித்து, வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை செய்துவருகிறார்.

அரவக்குறிச்சி,

முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி அ.ம.மு.க.விலிருந்து விலகி தி.மு.க.வில் சேர்ந்தார். இதையடுத்து கரூர் மாவட்டத்தில் உள்ள தி.மு.க. கட்சி நிர்வாகிகளை சந்தித்து, வளர்ச்சிப்பணிகள் குறித்து ஆலோசனை செய்துவருகிறார். அதன் ஒருபகுதியாக அரவக்குறிச்சி ஒன்றியத்திலுள்ள அரவக்குறிச்சி பேரூராட்சி மற்றும் பள்ளப்பட்டி பேரூராட்சி பகுதிகளில் உள்ள தி.மு.க. நிர்வாகிகளை நேற்று செந்தில்பாலாஜி சந்தித்து கட்சியின் வளர்ச்சிப்பணிகள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை வழங்கினார். இதில் தி.மு.க. ஒன்றிய செயலாளர் மணியன், முன்னாள் மாவட்ட ஊராட்சித்தலைவர் பூவை.ரமேஷ்பாபு, அரவக்குறிச்சி நகரச்செயலாளர் அண்ணாதுரை, பள்ளப்பட்டி நகர செயலாளர் தோட்டம் பஷீர்அகமது, மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மண்மாரி உதயக்குமார், ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் கார்த்தி, நகர இளைஞரணி அமைப்பாளர் ஆனந்தகுமார், கட்சி நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர். 

Next Story