பாம்பன் பாலம் பராமரிப்பு பணிக்காக ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்கள் ராமநாதபுரத்துடன் நிறுத்தம்


பாம்பன் பாலம் பராமரிப்பு பணிக்காக ராமேசுவரம் பாசஞ்சர் ரெயில்கள் ராமநாதபுரத்துடன் நிறுத்தம்
x
தினத்தந்தி 20 Dec 2018 4:15 AM IST (Updated: 20 Dec 2018 3:53 AM IST)
t-max-icont-min-icon

பாம்பன் பாலம் பராமரிப்பு பணிக்காக ராமேசுவரம் செல்லும் அனைத்து பாசஞ்சர் ரெயில்களும் வருகிற 2–ந் தேதி வரை ராமநாதபுரம் ரெயில் நிலையத்துடன் நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மதுரை,

பாம்பன் ரெயில் பாலத்தில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்காக அந்த பாதையில் ரெயில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையே, மதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் ரெயில்களின் போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, மானாமதுரையில் இருந்து ராமேசுவரம் செல்லும் பாசஞ்சர் ரெயில்கள் அனைத்தும் வருகிற ஜனவரி மாதம் 2–ந் தேதி வரை ராமநாதபுரம் வரை மட்டும் இயக்கப்படும்.

திருப்பதியில் இருந்து மதுரை வழியாக ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 2–ந் தேதி வரை இரு மார்க்கங்களிலும் மதுரை வரை மட்டும் இயக்கப்படும். கன்னியாகுமரியில் இருந்து மதுரை வழியாக ராமேசுவரம் வரை இயக்கப்படும் எக்ஸ்பிரஸ் ரெயில் வருகிற 2–ந் தேதி வரை இருமார்க்கங்களிலும் மதுரை வரை மட்டும் இயக்கப்படும்.

அதேபோல, மதுரை ரெயில் நிலைய தண்டவாள பராமரிப்பு பணிக்காக, மதுரை–செங்கோட்டை பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56734/56735) வருகிற 22–ந் தேதி முதல் 24–ந் தேதி வரையிலும், 26–ந் தேதி, 27–ந் தேதி, 29–ந் தேதியில் இருந்து 31–ந் தேதி வரை மற்றும் ஜனவரி மாதம் 2–ந் தேதி ஆகிய நாட்களில் இரு மார்க்கங்களிலும் விருதுநகரில் இருந்து இயக்கப்படும். இந்த ரெயில் விருதுநகர்–மதுரை இடையே ரத்து செய்யப்படுகிறது.

மதுரை–பழனி பாசஞ்சர் ரெயில்(வ.எண்.56709/56710) வருகிற ஜனவரி மாதம் 2–ந் தேதி வரை இரு மார்க்கங்களிலும் கூடல்நகர் ரெயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும். இந்த ரெயில் மதுரை–கூடல்நகர் இடையே மட்டும் ரத்து செய்யப்படுகிறது.


Next Story