நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது


நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரதம் 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்தது
x
தினத்தந்தி 21 Dec 2018 4:30 AM IST (Updated: 20 Dec 2018 10:27 PM IST)
t-max-icont-min-icon

15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாகர்கோவிலில் கிராம நிர்வாக அலுவலர்கள் உண்ணாவிரத போராட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்க குமரி மாவட்டக்கிளை சார்பில் நாகர்கோவில் வடிவீஸ்வரம் கிழக்கு கிராம நிர்வாக அலுவலகம் முன் நேற்று உண்ணாவிரத போராட்டம் நடந்தது. அடிப்படை ஊதியத்தில் 5 சதவீதம் பயணப்படி வழங்க வேண்டும், மத்திய அரசு செயல்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், மாவட்ட மாறுதல் உடனடியாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி போராட்டம் நடத்தப்பட்டது.

சங்க மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முத்து முன்னிலை வகித்தார். மாவட்ட இணைச்செயலாளர் நாகலிங்கம் தீர்மானங்களை விளக்கி பேசினார். ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க மாவட்ட நிர்வாகி நாராயண பெருமான் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

சங்க மாநில செயலாளர் சந்திரசேகரன், அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் கிறிஸ்டோபர், விளவங்கோடு வட்ட பொருளாளர் வடக்கத்தியான், ஓய்வு பெற்ற கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் நடராஜபிள்ளை ஆகியோர் போராட்டத்தை வாழ்த்தி பேசினார்கள். முடிவில் சங்க மாவட்ட பொருளாளர் பீட்டர் நன்றி கூறினார்.

காலையில் தொடங்கிய இந்த உண்ணாவிரத போராட்டம் மாலை வரை நடைபெற்றது.

Next Story