பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவ-மாணவிகள் பங்கேற்பு


பெருநகர சென்னை மாநகராட்சி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி மாணவ-மாணவிகள் பங்கேற்பு
x
தினத்தந்தி 21 Dec 2018 4:15 AM IST (Updated: 21 Dec 2018 2:38 AM IST)
t-max-icont-min-icon

சென்னை வேப்பேரியில் உள்ள செங்கல்வராயா பாலிடெக்னிக் கல்லூரியில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி சென்னை மாநகராட்சி சார்பில் நேற்று நடந்தது.

சென்னை,

மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன், வேப்பேரி போலீஸ் இன்ஸ்பெக்டர் டி.வீரகுமார், கல்லூரி முதல்வர் எம்.வெங்கட்ராமன், என்.சி.சி. திட்ட அதிகாரி பி.மாலதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் ‘பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம்’ என்று கல்லூரி மாணவ-மாணவிகள் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். நிகழ்ச்சியில் மாநகராட்சி சுகாதார கல்வி அலுவலர் டி.ஜி.சீனிவாசன் பேசுகையில், “பிளாஸ்டிக்கின் தீமை குறித்து பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது மாணவர்களின் கடமை”, என்றார்.

அதனைத்தொடர்ந்து வேப்பேரி ஜெர்மையா சாலையில் மாணவ-மாணவிகள் விழிப்புணர்வு மனித சங்கிலி நடத்தினர். வாழை மற்றும் பாக்கு மர மட்டைகளால் ஆன தட்டுகள், துணிப்பைகள், பேப்பர் உறிஞ்சு குழல்கள், சில்வர் தட்டுகள் உள்ளிட்டவற்றை கையில் ஏந்தியபடி, பிளாஸ்டிக் தீமையை உணர்த்தும் வாசகங்களை எழுப்பினர்.
1 More update

Next Story