பள்ளி மாணவி கடத்தல் 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது


பள்ளி மாணவி கடத்தல் 3 பேர் போக்சோ சட்டத்தில் கைது
x
தினத்தந்தி 22 Dec 2018 4:15 AM IST (Updated: 21 Dec 2018 11:08 PM IST)
t-max-icont-min-icon

அரூர் அருகே பள்ளி மாணவியை கடத்திய 3 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்துள்ளனர்.

அரூர்,

தர்மபுரி மாவட்டம் அரூர் அருகே உள்ள மாம்பாடியை சேர்ந்த மாணவி ஒருவர் பள்ளி ஒன்றில் 9-ம் வகுப்பு படித்து வந்தார். சம்பவத்தன்று மாணவியை காணவில்லை. அவரை உறவினர்கள், தோழிகள் வீடுகளில் தேடியும் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர் இது தொடர்பாக அரூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர்.

அதில் அதே பகுதியை சேர்ந்த சிவசக்தி (வயது 23) என்பவர் தங்கள் மகளை கடத்தி சென்றுள்ளார் எனக்கூறியுள்ளனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில் மாணவியை கடத்தியதாக சிவசக்தியை நேற்று போலீசார் கைது செய்தனர். மேலும் அவருக்கு உதவியதாக திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அடுத்த பாளையம்பட்டு பள்ளத்தை சேர்ந்த சிவா (41), ரமேஷ் (25) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் 3 பேர் மீதும் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்துள்ளனர்.

Next Story