மும்பை - நாக்பூர் விரைவு சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த ரூ.500 கோடி மாநில தொழில் மேம்பாட்டு கழகம் வழங்கியது

மும்பை - நாக்பூர் விரைவு சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்த ரூ.500 கோடி மாநில தொழில் மேம்பாட்டு கழகம் வழங்கியது
x
தினத்தந்தி 21 Dec 2018 11:30 PM GMT (Updated: 21 Dec 2018 10:53 PM GMT)

மும்பை - நாக்பூர் விரைவு சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்த மாநில தொழில் மேம்பாட்டு கழகம் ரூ.500 கோடி வழங்கி உள்ளது.

மும்பை, 

மும்பை - நாக்பூர் விரைவு சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்த மாநில தொழில் மேம்பாட்டு கழகம் ரூ.500 கோடி வழங்கி உள்ளது.

ரூ.500 கோடி

மும்பை - நாக்பூர் இடையே ரூ.49 ஆயிரத்து 247 கோடி செலவில் 700 கி.மீ. நீளத்திற்கு விரைவு சாலை போடப்படுகிறது. இந்த திட்டத்திற்காக ஏற்கனவே மாநில தொழில்மேம்பாட்டு கழகம், மாநில சாலை மேம்பாட்டு கழகத்திற்கு ரூ.1,000 கோடி வழங்கி இருந்தது.

இந்தநிலையில் மும்பை - நாக்பூர் விரைவு சாலை திட்டத்திற்கு மாநில தொழில்மேம்பாட்டு கழகம் மீண்டும் ரூ.500 கோடியை மும்பை சயாத்ரி மாளிகையில் நடந்த நிகழ்ச்சியின் போது வழங்கி உள்ளது.

நிலம் கையகப்படுத்த...

முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் முன்னிலையில் ரூ.500 கோடிக்கான காசோலையை தொழில் துறை மந்திரி சுபாஷ் தேசாய், பொதுப்பணித்துறை மந்திரி ஏக்நாத் ஷிண்டேயிடம் வழங்கினார்.

இதுகுறித்து மாநில அரசு வெளியிட்ட தகவலில், மும்பை - நாக்பூர் விரைவு சாலை திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணியை துரிதப்படுத்த மாநில தொழில்மேம்பாட்டு கழகம், சாலை மேம்பாட்டு கழகத்திற்கு இந்த பணத்தை வழங்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Next Story