கிருஷ்ணகிரியில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்


கிருஷ்ணகிரியில் சாலை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 23 Dec 2018 4:00 AM IST (Updated: 22 Dec 2018 10:40 PM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரியில் சாலை பணியாளர்கள் கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

கிருஷ்ணகிரி,

தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலை பணியாளர் சங்கத்தின் சார்பில், கிருஷ்ணகிரி உதவி கோட்டப் பொறியாளர் அலுவலகம் முன்பு கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நேற்று நடந்தது. வட்டக் கிளைத் தலைவர்கள் பாலகிருஷ்ணன், சின்னசாமி ஆகியோர் தலைமை தாங்கினார்கள். வட்ட செயலாளர் குணசேகரன் விளக்க உரையாற்றினார். வட்டத் துணைத்தலைவர் வெங்கடேசன் முன்னிலை வகித்தார்.

இந்த ஆர்ப்பட்டத்தில் மீன் வளத்துறை மாநில பொருளாளர் நந்தகுமார், தமிழ்நாடு ஊழியர் சங்க வட்டக்கிளை செயலாளர் மணி, மாவட்டத்தலைவர் தேவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். அரசு ஊழியர் சங்க மாவட்டத் தலைவர் சந்திரன் நன்றி கூறினார். முடிவில் வட்ட பொருளாளர் மாதையன் நன்றி கூறினார்.

ஆர்ப்பாட்டத்தின் போது, சாலை பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை வரன்முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தொழில் நுட்ப கல்வித்திறன் பெற ஊழியர்களுக்கான ஊதிய நிர்ணயம் ரூ. 5,200, ரூ. 20,500 மற்றும் தர ஊதியம் ரூ. 1,900 ஆகியவற்றை வழங்க வேண்டும். சாலை பணியாளர்களுக்கு நிரந்தர ஊதிய தொகுப்பிலிருந்து ஊதியம் வழங்க வேண்டும்.

சாலை பராமரிப்பு பணியை தனியார் பராமரிப்புக்காக வழங்கியதை கைவிட்டு அரசே ஏற்று நடத்த வேண்டும். சாலை பணியாளர்களுக்கு தளவாட பொருட்கள் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சங்க நிர்வாகிகள் கோஷங்கள் எழுப்பினார்கள்.

Next Story