கிருஷ்ணகிரியில் புத்தக திருவிழா கண்காட்சி நாளை தொடங்குகிறது


கிருஷ்ணகிரியில் புத்தக திருவிழா கண்காட்சி நாளை தொடங்குகிறது
x
தினத்தந்தி 22 Dec 2018 10:00 PM GMT (Updated: 22 Dec 2018 5:48 PM GMT)

கிருஷ்ணகிரியில் புத்தக திருவிழா கண்காட்சி நாளை தொடங்குகிறது.

கிருஷ்ணகிரி, 

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள புத்தக பிரியர்களுக்காகவும், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ-மாணவிகள் பயன் பெறும் வகையிலும்

தமிழ்நாடு அறிவியல் இயக்கம், கிருஷ்ணகிரி மாவட்ட விதைகள் அமைப்பு, ஊத்தங்கரை அதியமான் கல்வி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து நடத்தும் புத்தக திருவிழா கிருஷ்ணகிரி புதிய பஸ் நிலையம் எதிரில் உள்ள எஸ்.வி.வி. திருமண மண்டபத்தில் நாளை (திங்கட்கிழமை) தொடங்குகிறது. இந்த புத்தக திருவிழாவை மாவட்ட கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைக்கிறார். 35-க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன. வருகிற (ஜனவரி) 2-ந் தேதி வரை இந்த புத்தக திருவிழா கண்காட்சி நடக்கிறது.

இது குறித்து புத்தக திருவிழா ஒருங்கிணைப்பாளர்கள் சிவக்குமார், கணேசன், டாக்டர் அறிவழகன் ஆகியோர் கூறுகையில், கிருஷ்ணகிரியில் நாளை தொடங்கும் புத்தக திருவிழாவில் ஆன்மிகம், மருத்துவம், பொறியியல், பொது அறிவு, அறிவியல், கலை, கதை, கணிப்பொறி, விளையாட்டு போன்ற அனைத்து வகை புத்தகங்களும் இடம் பெற்றுள்ளன. தினமும் காலை 11 மணி முதல் இரவு 9.30 மணி வரையில் புத்தக கண்காட்சி நடைபெறுகிறது. அனுமதி இலவசம். தினமும் மாலை கலை நிகழ்ச்சியும், கருத்துரையும் நடக்கிறது, என்றனர்.

இந்த புத்தக திருவிழா கண்காட்சியில் “தினத்தந்தி” பதிப்பக புத்தகங்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன. அதாவது இதற்காக சிறப்பு ஸ்டால் அமைக்கப்பட்டு, அங்கு “தினத்தந்தி” பதிப்பகத்தின் சார்பில் வெளியிடப்பட்ட புத்தகங்கள் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இதில் தமிழ் சினிமா வரலாறு, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் சாதனை சரித்திரம், ரஜினிகாந்த் வாழ்க்கை வரலாறு ஆகிய புத்தகங்கள் 20 சதவீதம் தள்ளுபடியில் கிடைக்கும். அதேபோல், வரலாற்றுச் சுவடுகள், இலங்கை தமிழர் வரலாறு, ஆயிரம் ஆண்டு அதிசயம், மகிழ்ச்சியான வாழ்வுக்கு மகத்தான மந்திரங்கள், புதையல் ரகசியம், ஆளுமைத்திறன், பரபரப்பான வழக்குகள், சிறகை விரிக்கும் மங்கள்யான், பரபரப்பான வழக்குகள், கலாம் ஒரு சரித்திரம், ஆளுமைத்திறன், உலகை உலுக்கிய வாசகங்கள், நம்ப முடியாத உண்மைகள், 17 நட்சத்திர தலங்கள் பரிகார முறைகள் உள்பட பல்வேறு புத்தகங்கள் 10 சதவீதம் சிறப்பு தள்ளுபடி விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

Next Story