மாங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருட்டு
மாங்காடு அருகே வீட்டின் பூட்டை உடைத்து நகை-பணம் திருடப்பட்டது.
பூந்தமல்லி,
காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காடு அடுத்த கெருகம்பாக்கம், லட்சுமி நகரை சேர்ந்தவர் பெர்ணாண்டோ (வயது 58), தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூங்கி கொண்டிருந்தார். காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு அறையில் இருந்த பீரோ திறக்கப்பட்டு துணிகள் சிதறி கிடந்தன.
இது குறித்து மாங்காடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
நகை-பணம் திருட்டு
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை செய்தனர். பீரோவில் இருந்த 4 பவுன் நகைகள், ரூ.7 ஆயிரம் மர்மநபர்களால் திருடப்பட்டிருந்தது.இதுகுறித்து மாங்காடு போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story