பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: என்ஜினீயர் பலி; 2 பேர் படுகாயம்


பேராவூரணி அருகே  மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதல்: என்ஜினீயர் பலி; 2 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 23 Dec 2018 3:45 AM IST (Updated: 23 Dec 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

பேராவூரணி அருகே மோட்டார் சைக்கிள்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்ட விபத்தில் என்ஜினீயர் உயிரிழந்தார். அவரது நண்பர் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

பேராவூரணி,

புதுக்கோட்டை மாவட்டம் அணவயல்- செங்கொல்லை பகுதியை சேர்ந்தவர் வல்லத்தரசு(வயது22). என்ஜினீயர். இவர் அதே பகுதியை சேர்ந்த நண்பரான பாலிடெக்னிக் மாணவர் பவித்ரன்(18) என்பவருடன் நேற்று முன்தினம் இரவு மோட்டார் சைக்கிளில் பேராவூரணி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஆவணம் பகுதியில் தனியார் பள்ளி அருகே இவர்கள் சென்று கொண்டிருந்த போது எதிரில் அம்மையாண்டியைச் சேர்ந்த இருசக்கர வாகன மெக்கானிக் கணபதி என்பவர் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளும் வல்லத்தரசு ஓட்டி சென்ற மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியது.

இதில் தலையில் பலத்த காயமடைந்த வல்லத்தரசு சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த கணபதி தஞ்சையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையிலும், பவித்ரன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இது குறித்து பேராவூரணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story