மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூரில் 27-ந் தேதி நடக்கிறது


மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருப்பூரில் 27-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 23 Dec 2018 2:49 AM IST (Updated: 23 Dec 2018 2:49 AM IST)
t-max-icont-min-icon

தமிழக அரசால் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு மாற்றுத்திறனாளிகள் பயன்பெற்று வருகிறார்கள்.

திருப்பூர்,

திருப்பூர் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகள் அனைவரும் அரசின் திட்டங்களை பெற வேண்டி மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டும் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகிற 27-ந் தேதி காலை 10.30 மணிக்கு கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது.

இந்த சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வகையான மாற்றுத்திறனாளிகளும் தங்களுக்கு தேவையான நலத்திட்ட உதவிகள் பெற விண்ணப்பத்துடன் வந்து பயன் பெறலாம். மேலும் மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய அரசின் தனித்துவ அடையாள அட்டையை மின்னஞ்சலில் பதிவேற்றம் செய்ய விண்ணப்பங்கள் பெறப்படுகிறது. வருமான வரம்பின்றி முதல்- அமைச்சர் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்ட அட்டை பெறவும், மாற்றுத்திறனாளிகளுக்கு ஆதார் அட்டை எடுக்கவும் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கான அடையாள அட்டை நகல், ரேஷன் கார்டு நகல், ஆதார் அட்டை நகல் ஆகியவற்றுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம் என திருப்பூர் மாவட்ட கலெக்டர் கே.எஸ்.பழனிசாமி தெரிவித்துள்ளார்.
1 More update

Next Story