ஓடும் ரெயிலில் முதியவரிடம் பணம் அபேஸ் மர்ம மனிதர்களுக்கு வலைவீச்சு
ஓடும் ரெயிலில் முதியவரிடம் பணத்தை அபேஸ் செய்த மர்ம மனிதர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விருத்தாசலம்,
ஈரோட்டை சேர்ந்தவர் ராமதாஸ் (வயது 60). இவரது மனைவி பத்மாவதி(55). பத்மாவதிக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தினால் புதுச்சேரியில் உள்ள ஒரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். பின்னர் அங்கிருந்து இருவரும் ஈரோடுக்கு புறப்பட்டனர்.
இதில் புதுச்சேரியில் இருந்து விழுப்புரம் வந்த தம்பதியினர், அங்கிருந்து விருத்தாசலம் வந்து சேலம் பயணிகள் ரெயிலில் செல்லும் வகையில் சென்னையில் இருந்து வந்த குருவாயூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் ஏறி விருத்தாசலத்திற்கு வந்தனர்.
சிறிது தூரம் ரெயில் சென்றவுடன், ராமதாஸ் தான் வைத்திருந்த பர்சை பார்த்தார். அப்போது அதை காணவில்லை. மர்ம மனிதர்கள் அபேஸ் செய்து சென்று இருப்பது தெரியவந்தது. அதில், ரூ. 5 ஆயிரம் ரொக்கம் வைத்திருந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து விருத்தாசலம்ரெயில் நிலையம் வந்தவுடன், இதுபற்றி ராமதாஸ் ரெயில்வே இருப்புபாதை போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சின்னப்பன் வழக்குப்பதிவு செய்து, மர்ம மனிதர்களை வலைவீசி தேடி வருகின்றனர். ஓடும் ரெயிலில் முதியவரிடம் பணம் அபேஸ் செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
Related Tags :
Next Story