நினைவு தினத்தையொட்டி பெரியார், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை


நினைவு தினத்தையொட்டி பெரியார், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை
x
தினத்தந்தி 25 Dec 2018 3:45 AM IST (Updated: 24 Dec 2018 11:12 PM IST)
t-max-icont-min-icon

நினைவு தினத்தையொட்டி பெரம்பலூரில் உள்ள பெரியார், எம்.ஜி.ஆர். சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பெரம்பலூர்,

தந்தை பெரியாரின் 45-வது நினைவு தினம் மற்றும் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். 31-வது நினைவு தினத்தையொட்டி பெரம்பலூரில் உள்ள அவர்களது சிலைகளுக்கு அரசியல் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பெரம்பலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள தந்தை பெரியார் மற்றும் எம்.ஜி.ஆரின் சிலைகளுக்கு பெரம்பலூர் மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.வுமான ராமச்சந்திரன் தலைமையில் அக்கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதில் பெரம்பலூர் தொகுதி எம்.பி. மருதராஜா உள்பட அ.தி.மு.க.வினர் பலர் கலந்து கொண்டனர். மேலும் பெரம்பலூர் புதிய, பழைய பஸ் நிலையம், சங்குப்பேட்டை ஆகிய பகுதிகளில் அலங்கரிக்கப்பட்டு வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல் பெரம்பலூர் பழைய பஸ் நிலையம் அருகே உள்ள தந்தை பெரியாரின் சிலைக்கு தி.மு.க.வின் மாநில பொதுக்குழு உறுப்பினரும், ஓவியருமான முகுந்தன் மற்றும் திராவிடர் கழகத்தின் பெரம்பலூர் மாவட்ட தலைவர் செல்வராசு தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதேபோல் விடுதலை சிறுத்தைகள் கட்சியினரும், எம்.ஜி.ஆர். கழகத்தினரும் பெரியார் சிலைக்கு மாலை அணிவித்தனர். கவுல்பாளையத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு எம்.ஜி.ஆர். கழகத்தினர் சார்பில் மாலை அணிவிக்கப்பட்டது.


Next Story