காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நாகையில், நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நாகையில், நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Dec 2018 4:30 AM IST (Updated: 25 Dec 2018 2:10 AM IST)
t-max-icont-min-icon

காலிப்பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி நீதித்துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நாகப்பட்டினம்,

நாகை புதிய பஸ் நிலையம் அருகே மாவட்ட நீதிமன்ற நுழைவு வாயில் முன்பு தமிழ்நாடு நீதித்துறை ஊழியர் சங்கம் சார்பில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர்கள் ராஜ் குமார், ரவி, செயலாளர் பாண்டியன், பொருளாளர் புகழேந்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தில் இணைச்செயலாளர்கள் கவிதா, நேதாஜி, மாநில செயற்குழு உறுப்பினர்கள் முத்துக்குமார், ரஜினிஷ் மற்றும் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மாவட்ட மாறுதல்களை உடனடியாக கைவிட வேண்டும். மாவட்ட நீதிமன்ற தலைமை நிர்வாக அலுவலர் மற்றும் சிரஸ்தார்களை சொந்த மாவட்டத்திலேயே பணியமர்த்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்புதல், அடிப்படை பணியாளர்களின் பதவி உயர்வுக்கு உடனடியாக உரிய உத்தரவாதம் அளிக்க வேண்டும். தற்காலிக பணியாளர்களை ஏற்கனவே நீதித்துறையில் உள்ள காலி பணியிடங்களில் நிரந்தரமாக பணியமர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோஷங்களை எழுப்பினர்.


Next Story