குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைக்கு வந்ததால் பரபரப்பு


குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைக்கு வந்ததால் பரபரப்பு
x
தினத்தந்தி 26 Dec 2018 4:45 AM IST (Updated: 26 Dec 2018 1:59 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலைக்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

நல்லம்பள்ளி,

நல்லம்பள்ளி அடுத்த அதியமான்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட அக்ரஹார தெரு, கவுண்டர் தெரு, எம்.ஜி.ஆர். தெரு, அண்ணாதெரு, காந்திதெரு, உடையார் தெரு, ராஜவீதி, பாரதியார் தெரு உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட வீதிகளில் 5 ஆயிரத்திற்கும் அதிகமான குடியிருப்புகளில் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு நிலவியது. இதுகுறித்து ஊராட்சி நிர்வாகத்தில் பல முறை தெரிவித்தும் கண்டுக்கொள்ளவில்லை.

இதனால் பொதுமக்கள் குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் அதியமான்கோட்டை பஸ் நிறுத்தம் பகுதியில் தர்மபுரி-சேலம் பைபாஸ் சாலையில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் அதியமான்கோட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், ஊராட்சி செயலர் பிரகாசம் ஆகியோர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது குடிநீர் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

Next Story