மாவட்ட செய்திகள்

மத்தூர் அருகே வாலிபர் குத்திக்கொலை - அக்காள் கணவர் கைது + "||" + A youth killed near Mathur - Sister husband arrested

மத்தூர் அருகே வாலிபர் குத்திக்கொலை - அக்காள் கணவர் கைது

மத்தூர் அருகே வாலிபர் குத்திக்கொலை - அக்காள் கணவர் கைது
மத்தூர் அருகே வாலிபரை குத்திக்கொலை செய்த அக்காள் கணவர் கைது செய்யப்பட்டார்.
மத்தூர்,

மத்தூர் அருகே வாலிபரை குத்திக்கொலை செய்த அக்காள் கணவரை போலீசார் கைது செய்தனர்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

கிருஷ்ணகிரி மாவட்டம் மத்தூர் அருகே உள்ள மாடரஅள்ளி அண்ணா நகரைச் சேர்ந்தவர் மணிமாறன். இவரது மகன் வல்லரசு (வயது 18). கூலித்தொழிலாளி. இவரது அக்காள் கணவர் வெங்கடேசன் (29). கார் டிரைவர். அதே பகுதியைச் சேர்ந்தவர் ஆவார். கடந்த 21-ந் தேதி அதே பகுதியைச் சேர்ந்த சிலருடன் வெங்கடேசன் பேசிக் கொண்டிருந்தார்.


அப்போது அங்கு வந்த வல்லரசு தனக்கு வேண்டாதவர்களுடன் நீங்கள் ஏன் பேசிக் கொண்டிருக்கிறீர்கள் என கேட்டுள்ளார். இதுதொடர்பாக அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த வெங்கடேசன் சூரி கத்தியால் வல்லரசை சரமாரியாக குத்தினார்.

இதில் பலத்த காயம் அடைந்த வல்லரசை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக மத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பிறகு அவர் மேல் சிகிச்சைக்காக தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். இது தொடர்பாக மத்தூர் போலீசார் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்த நிலையில் தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த வல்லரசு நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி மத்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியது.


தொடர்புடைய செய்திகள்

1. மானாமதுரை அருகே, தண்டவாளத்தில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி ரெயிலை மறித்த வாலிபர் - சமூகவலைத்தளங்களில் பரவும் காட்சிகள்
மானாமதுரை அருகே தண்டவாளத்தின் குறுக்கே நிறுத்திய மோட்டார் சைக்கிளில் அமர்ந்து ரெயிலை நிறுத்திய வாலிபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது சம்பந்தமான காட்சிகள் சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவி வருகின்றன. இது பற்றிய விவரம் வருமாறு:-
2. விபத்தில் மூளைச்சாவு அடைந்த தாயை தொடர்ந்து வாலிபரும் பலி
விபத்தில் மூளைச்சாவு அடைந்த தாயை தொடர்ந்து வாலிபரும் இறந்தார். திருச்சி தனியார் மருத்துமவனை நிர்வாகத்தின் மீது உறவினர்கள் சந்தேகமடைந்து போலீசில் புகார் தெரிவித்தனர்.
3. சேலத்தில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளி படுகொலை - வாலிபர் கைது
சேலத்தில் முன்விரோதம் காரணமாக தலையில் கல்லை போட்டு தொழிலாளியை கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
4. 8 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற, விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை - வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
அரக்கோணம் அருகே 8 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில் விவசாயிக்கு இரட்டை ஆயுள் தண்டனை விதித்து வேலூர் மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. மேலும் சிறுமியின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
5. சேர்ந்து வாழ மறுத்த பெண் கொலை: முன்னாள் கவுன்சிலருக்கு விதித்த ஆயுள் தண்டனையை ஐகோர்ட்டு உறுதி செய்தது
தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்த பெண்ணை கொன்ற முன்னாள் கவுன்சிலருக்கு தஞ்சை கோர்ட்டு விதித்த ஆயுள் தண்டனையை உறுதி செய்து மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.