விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்


விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு: அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 26 Dec 2018 11:00 PM GMT (Updated: 26 Dec 2018 9:21 PM GMT)

விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தர்மபுரி,

விவசாய நிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்கும் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், அதனை கைவிடக்கோரியும் பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பில் தர்மபுரி தொலைபேசி நிலையம் முன்பு நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர் கோவி.சிற்றரசு, ம.தி.மு.க. மாவட்ட செயலாளர் தங்கராசு, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளர் ஜெயந்தி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சின்னசாமி, திராவிடர் கழக மாவட்ட செயலாளர் தமிழ்ச்செல்வன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட நிர்வாகிகள் இளம்பரிதி, சிசுபாலன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினார்கள்.

விளைநிலங்களில் உயர்மின்கோபுரம் அமைக்ககூடாது என போராடும் விவசாயிகளை மத்திய, மாநில அரசுகள் அழைத்து பேசி பிரச்சினைக்கு உரிய தீர்வை காண வேண்டும். விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையில் விளைநிலங்கள் வழியாக உயர்மின்கோபுரம் அமைக்காமல், மாற்று வழியில் பூமியின் கீழே கேபிள்கள் அமைத்து மின்சாரத்தை கொண்டு செல்ல வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் பல்வேறு கட்சிகளின் நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.


Next Story