தர்மபுரியில் நீதித்துறை ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
தர்மபுரியில் நீதித்துறை ஊழியர்கள் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தர்மபுரி,
நீதித்துறை ஊழியர் சங்கத்தின் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தர்மபுரி ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்க தலைவர் மகேந்திரன் தலைமை தாங்கினார். செயலாளர் முனவர், செயற்குழு உறுப்பினர் அரங்கண்ணல் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார்கள்.
இந்த ஆர்ப்பாட்டத்தின் போது நீதித்துறையில் பணிபுரியும் நிர்வாக அலுவலர்கள், சிரஸ்தார்கள், பணியாளர்களை ஒரு மாவட்டத்தில் இருந்து வெளிமாவட்டங்களுக்கு இடமாறுதல் செய்யும் உத்தரவை ரத்து செய்ய வேண்டும்.
கோர்ட்டுகளில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நீதித்துறை ஊழியர்களுக்கு முறையான பதவி உயர்வை உறுதி செய்ய வேண்டும். சுருக்கெழுத்தர்கள், தட்டச்சர்களை பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என்பவை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கண்டன கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் கோர்ட்டு ஊழியர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story