நாகையில் போலீசாருக்கு பயிற்சி முகாம் - டி.ஐ.ஜி. லோகநாதன் பங்கேற்பு


நாகையில் போலீசாருக்கு பயிற்சி முகாம் - டி.ஐ.ஜி. லோகநாதன் பங்கேற்பு
x
தினத்தந்தி 28 Dec 2018 11:15 PM GMT (Updated: 28 Dec 2018 8:46 PM GMT)

நாகையில் போலீசாருக்கு பயிற்சி முகாம் நடைபெற்றது. இதில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் கலந்து கொண்டார்.

நாகப்பட்டினம்,

நாகை மாவட்ட காவல்துறை சார்பில் போலீசார் நிறைவாழ்வு பயிற்சி முகாம் நாகையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன் தலைமை தாங்கி, முகாமினை தொடங்கி வைத்தார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு விஜயகுமார் முன்னிலை வகித்தார். முகாமில் டி.ஐ.ஜி. லோகநாதன் பேசியதாவது:-

பணி சுமையினால் போலீசார்களுக்கு ஏற்படும் மன உளைச்சல் சம்பந்தமாக ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது குறித்து போலீசாருக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.

மேலும் மன அழுத்தத்தில் இருந்து விடுபட போலீசார் இந்த பயிற்சியில் கலந்து கொண்டு புத்துணர்ச்சி பெற வேண்டும். தனது குடும்பத்தினருடன் பரஸ்பர ஒற்றுமையுடன் போலீசார் பழக வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

பயிற்சியில் உதவி போலீஸ் சூப்பிரண்டு பத்ரிநாராயணன், மதுவிலக்கு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு முருகேசன் உள்பட போலீசார் கலந்துகொண்டனர். முகாமில் போலீசாருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது.


Next Story