நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியா? கனிமொழி எம்.பி. பதில்


நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியா? கனிமொழி எம்.பி. பதில்
x
தினத்தந்தி 30 Dec 2018 3:45 AM IST (Updated: 30 Dec 2018 12:29 AM IST)
t-max-icont-min-icon

நாடாளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் போட்டியா? என்பது குறித்து கனிமொழி எம்.பி. பதில் அளித்து உள்ளார்.

தூத்துக்குடி, 


நெல்லையில் நடக்கும் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக கனிமொழி எம்.பி. நேற்று மாலையில் விமானம் மூலம் தூத்துக்குடிக்கு வந்தார். அவரை தி.மு.க. தெற்கு மாவட்ட பொறுப்பாளர் அனிதா ஆர்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., வடக்கு மாவட்ட பொறுப்பாளர் கீதாஜீவன் எம்.எல்.ஏ. உள்ளிட்டவர்கள் வரவேற்றனர். பின்னர் அவர் கார் மூலம் நெல்லைக்கு புறப்பட்டு சென்றார்.

முன்னதாக கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழகத்தில் சுகாதாரத்துறை மோசமாக செயல்பட்டு வருகிறது. இதனை மு.க.ஸ்டாலின் பல உதாரணங்கள் மூலம் எடுத்து காட்டி உள்ளார். உடல் உறுப்பு மாற்று சிகிச்சை முதல் குட்கா வரை எத்தனை பிரச்சினைகள் உள்ளன. அதில் ஒன்று தான் இந்த எச்.ஐ.வி. ரத்தம் ஏற்றப்பட்ட விவகாரம்.

எச்.ஐ.வி. பற்றி இந்த அளவிற்கு விழிப்புணர்வு ஏற்பட்ட பின்னரும், தமிழக அரசு மனிதர்கள் மீது அக்கறை இல்லாமல் இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. அரசாங்கம் இவ்வளவு மெத்தன போக்காக இருப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

நாடாளுமன்ற தேர்தலின்போது தூத்துக்குடி தொகுதியில் நான் போட்டியிடுவது குறித்து கட்சி தலைமை தான் முடிவு செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story