உசிலம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல், வாலிபர் பலி
உசிலம்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் வாலிபர் பலினார்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டி அருகே உள்ள வடுகபட்டி காலனியை சேர்ந்தவர் ராமர் மகன் நாகராஜ் (வயது 29). இவர் அப்பகுதியில் உள்ள செங்கல் காளவாசலில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடித்துவிட்டு நாகராஜ் மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வடுகபட்டியில் உள்ள மதுரை ரோட்டில் தி.விலக்கு என்ற இடத்தில் அவர் வந்தபோது, அவ்வழியாக மதுரையில் இருந்து தேனி நோக்கி சென்ற கார் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கிவீசப்பட்ட நாகராஜ் படுகாயம் அடைந்தார். பின்னர் அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக மதுரை பெரிய ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர். ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி நாகராஜ் இறந்துபோனார். இதுகுறித்து உசிலம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story