கரூர் ஊராட்சி பகுதியில் பண்ணைக்குட்டைகள் - குளங்கள் தூர்வாரும் பணி தீவிரம்
கரூர் ஊராட்சி பகுதியில் பண்ணைக்குட்டைகள்-குளங்கள் தூர்வாரும் பணி தீவிரமாக நடக்கிறது.
கரூர்,
கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கழுகூர், புத்தூர், தோகைமலை உள்ளிட்ட பகுதிகளில் பண்ணைக்குட்டைகள் மற்றும் குளங்கள் தூர்வாரும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்த பணிகளை நேற்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
கரூர் மாவட்டத்தில் ஊராட்சிப் பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும், விவசாயிகள் மீன்வளர்ப்பு, கால்நடைகளுக்கு நீர், மழைநீரை சேமித்தல் உள்ளிட்ட பல்வேறு பயன்பாடுகளுக்கும் இந்த பண்ணைக்குட்டைகள் பெரிதும் உதவியாக இருக்கின்றது. மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் மொத்தம் 260 வகையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. அதில் பண்ணைக்குட்டை அமைக்கும் பணியும், குளங்கள் துார்வாரும் பணியும் அடங்கும்.
பெரும்பான்மையான பகுதிகள் விவசாயத்தையே நம்பி இருக்கின்றது. எனவே, பண்ணைக்குட்டை அமைப்பதன் மூலமாகவும், குளங்களை தூர்வாருவதாலும் அதனைச்சுற்றியுள்ள பகுதிளில் நீர்செறிவூட்டம் பெற்று, நிலத்தடி நீர்மட்டம் உயருகின்றது. மேலும், பண்ணைக்குட்டை அமைத்து மீன் வளர்ப்பதால் விவசாயிகளுக்கு கூடுதலாக பொருளாதாரம் மேம்பாடு அடைய வாய்ப்பாக உள்ளது. இத்திட்டத்தின் மூலம் மழை நீர் சேகரிக்கப்படுகின்றது, கிணறுகள் மற்றும் ஆழ்துளை கிணறுகளில் நீர்மட்டம் சராசரியாக உயர்ந்திருக்கின்றது.
கரூர் மாவட்டத்தில் 2017-18-ம் ஆண்டில் 240 பணிகள் இலக்கீடாக எடுத்துக்கொள்ளப்பட்டு 241 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. அதேபோல, 2018-19-ம் ஆண்டில் 579 பணிகள் இலக்கீடாக எடுத்துக்கொள்ளப்பட்டு 177 பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கழுகூர் ஊராட்சியில் உள்ள மருதூர்குட்டையில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்ட பணியாளர்களை கொண்டு தூர் வாரப்பட்டு வருகிறது. புத்தூர் ஊராட்சியில் தாய் திட்டத்தின் கீழ் சிறு பாசனக்குளமான மணிக்கருப்பக்கவுண்டர்குட்டை மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோல் தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பகுதியில் 13 சிறுபாசன குளங்கள் அமைக்கப்பட்டு வருகிறது. மேலும் அனைத்து பணிகளும் விரைவில் முடிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கவிதா, செயற்பொறியாளர் சடையப்பன் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Tags :
Next Story