கீழ்வேளூர் அருகே அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை


கீழ்வேளூர் அருகே அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
x
தினத்தந்தி 31 Dec 2018 3:45 AM IST (Updated: 31 Dec 2018 12:53 AM IST)
t-max-icont-min-icon

கீழ்வேளூர் அருகே அங்கன்வாடி மைய கட்டிடத்தை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கீழ்வேளூர்,

கீழ்வேளூரை அடுத்த சிக்கல் ஊராட்சியில் பொன்வெளி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலகம் அருகே அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு பொன்வெளி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றனர்.

இந்த அங்கன்வாடி மையம் அருகே கழிவறை அமைக்கப்பட்டது. கழிவறையில் குழாய்கள் மூலம் தண்ணீர் இணைப்பு வழங்கப்பட்டு வந்தது. இந்தநிலையில் அங்கன்வாடி மைய கட்டிடம் பழுதடைந்துள்ளது. இதனால் தங்களது குழந்தைகளை இங்கு அனுப்ப அச்சப்படுகின்றனர். மேலும், அங்கன்வாடி குழந்தைகள் பயன்படுத்தும் கழிவறையும் பழுதடைந்து காணப்படுகிறது.

சுகாதார சீர்கேடு

இதன் காரணமாக குழந்தைகள் திறந்த வெளியில் மலம், ஜலம் கழிப்பதற்கு வெளியே செல்லும் அவலநிலை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்றுநோய் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பழுதடைந்த அங்கன்வாடி கட்டிடம் மற்றும் கழிவறை ஆகியவற்றை சீரமைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்னர்.

Next Story